உக்ரைனின் கீவ் பகுதியில் மேலும் 900 உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து மேலும் 900 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உக்ரைனின் கீவ் பகுதியில் மேலும் 900 உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து மேலும் 900 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த ரஷியா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுத்தது. போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் அழிந்துள்ளன. 

மேலும் உக்ரைன் பொதுமக்கள் மீது ரஷியப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பாக கீவ் அருகே புச்சா பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. 

இந்நிலையில் தலைநகர் கீவ் பகுதியில் ரஷியப் படையினர் பின்வாங்கிய நிலையில், அங்கு உக்ரைன் தரப்பில் பராமரிப்புப் பணி நடந்தபோது கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 900 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதில் 95% பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com