
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்கிடம் ட்விட்டர் பயனாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கடந்த 14-ம் தேதி தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 9 சதவிகித பங்குகளை வைத்துள்ள அவர், அதன் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிக்க | ட்விட்டா் நிறுவனத்தை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயாா்: எலான் மஸ்க்
இந்த நிலையில் ட்விட்டர் பயனாளர்கள் சிலர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதில் இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ட்விட்டர் பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது:
"நீங்கள் (எலான் மஸ்க்) ஏதாவது வாங்க நினைத்தால், இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள். ட்விட்டரை விட்டுவிடுங்கள்."
மற்றொருவரின் பதிவு:
"இலங்கையை 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள விருப்பமுள்ளதா? உங்களது டெஸ்லாவுக்கு இங்கு சிறந்த கிராஃபைட் கிடைக்கும்."
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...