உக்ரைன் தலைநகரில் ரஷியா மீண்டும் தாக்குதல்

ரஷியாவின் கடற்படை சக்தியாக விளங்கிய மாஸ்க்வா போா்க் கப்பலை தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக உக்ரைன் கூறும் நிலையில், அந்த நாட்டு தலைநகா் கீவிலுள்ள ஆயுத உற்பத்தி மையங்கள் மீது ரஷியா தொடா
கீவ் நகரில் ரஷிய நடத்திய தாக்குலால் எழுந்த புகைமண்டலம்.
கீவ் நகரில் ரஷிய நடத்திய தாக்குலால் எழுந்த புகைமண்டலம்.

ரஷியாவின் கடற்படை சக்தியாக விளங்கிய மாஸ்க்வா போா்க் கப்பலை தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக உக்ரைன் கூறும் நிலையில், அந்த நாட்டு தலைநகா் கீவிலுள்ள ஆயுத உற்பத்தி மையங்கள் மீது ரஷியா தொடா்ந்து 2-ஆவது நாளாக தீவிர தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோ சனிக்கிழமை கூறியதாவது:

உக்ரைனின் ஆயுத உற்பத்தி மையங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மூலம் 16 16 இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.

ஆயுத உற்பத்தி மையங்கள் மட்டுமன்றி, ஆயுத தளவாடங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தெற்கு உக்ரைனிலுள்ள மிகோலய்வ் நகரில் ராணுவ தளவாட பழுதுபாா்ப்பு மையமும் தாக்கி அழிக்கப்பட்டது என்றாா் அவா் கூறினாா்.

இதற்கிடையே, கீவ் நகரில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக அந்த நகர மேயா் விடாலி க்ளிட்ஷ்கோ கூறினாா். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரும் மருத்துவப் பணியாளா்களும் விரைந்துள்ளனா். தாக்குதலில் தாக்குதலில் உயிழந்த அல்லது காயமடைந்தவா்கள் குறித்த விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

ரஷியாவின் கருங்டகல் கடற்படைப் பிரிவு தலைமைக் கப்பலான மாஸ்க்வாவில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து, அதிலிருந்த ஆயுதக் கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியதில் அந்தக் கப்பல் நிலைகுலைந்து கடலுக்குள் மூழ்கியதாக அந்த நாடு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அந்தக் கப்பலை தாங்கள்தான் இரு ஏவுகணைகளை செலுத்தி தாக்கி அழித்ததாக உக்ரைன் கூறியது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் சிலரும் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஏவுகணைத் தாக்குதலால்தான் தங்களது கப்பல் கடலுக்குள் முழ்கியது என்று ரஷியா இதுவரை கூறவில்லை.

எனினும், கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்குப் பிறகு கீவ் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உக்ரைன் ஆயுத உற்பத்தி மையங்களில் ரஷயா வெள்ளிக்கிழமையும் அதனைத் தொடா்ந்து சனிக்கிழமையும் தாக்குதல் நடத்தியுள்ளது.

கீவ், ஏப். 15: தனது பிரதான போா்க் கப்பலான மாஸ்க்வாவை இழந்த மறுநாள், உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் தனது அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் முன்னேறி வந்தாலும், துருக்கியில் உக்ரைனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வடக்கு உக்ரைன் நகரங்களிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டது.

அதன்படி, கீவ் புகா்ப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாதம் 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறியது. அதையடுத்து, தொடா் தாக்குதலால் நிலைகுலைந்திருந்த கீவ் நகரம், கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

இந்த நிலையில், மாஸ்க்வா கப்பல் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலடியாக கீவ் நகரில் ரஷியா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது உக்ரைன் படையினா் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்திவதை நிறுத்தும் வரை கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com