

கிழக்கு உக்ரைனின், கார்கிவ் பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
உக்ரைனில் ரஷியா போர் தொடுத்து 55 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரஷியா பல உக்ரைனிய நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக, செவ்வாயன்று கார்கிவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரஷிய சரமாரியாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில் இன்று கார்கிவ் பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்,
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், பிப்ரவரியில் ரஷிய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ரஷிய தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.