நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இலங்கையில் போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

இலங்கையில் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2022, 1:44 pm

இலங்கையில் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எரிபொருள்களின் விலை நேற்று ஒரே நாளில் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு ரம்புக்கனை என்ற இடத்தில் 8 மணிநேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் காவல்துறையினர் கலைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.