

இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபட்ச, இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையின் ரம்புக்கனையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபட்ச, 'ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுதொடர்பாக கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இலங்கை காவல்துறையினர் மக்களுக்கு மிகுந்த மிகுந்த மரியாதையுடன் சேவை செய்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மரியாதையுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இலங்கையில் போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.