ட்விட்டரை வாங்கியது எப்படி? கடன் அளித்த வங்கிகளுக்கு நம்பிக்கை ஊட்டிய எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஊதியத்தை குறைப்பதன் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் (கோப்புப்படம்)
எலான் மஸ்க் (கோப்புப்படம்)

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்க பல்வேறு வங்கிகள் உதவி செய்துள்ளது. கடன் வழங்க முன்வந்த வங்கிகளிடம் ட்விட்டரை எப்படி நிர்வகிக்க போகிறேன் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஊதியத்தையும் குறைக்கப்போவதாகவும் ட்வீட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகளை வகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, ட்விட்டரை வாங்குவதற்கான விவரங்களை சமர்ப்பித்ததை தொடர்ந்து, அதற்கு கடன் வாங்க முயற்சித்துள்ளார். பின்னர், தனது யோசனைகளை கடன் வழங்க முந்வந்தர்களுக்கு கூறியுள்ளார். 

ஏப்ரல் 21ஆம் தேதி, அவர் வங்கிகளுக்கு அளித்த உறுதிமொழியே ட்விட்டர் நிர்வாகக் குழு அவரின் திட்டத்தை ஏற்க காரணமாக மாறியுள்ளது. போதுமான வருவாயை ட்விட்டர் ஈட்டியுள்ளதாக அவர் வங்கிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இறுதியில், ட்விட்டரை வாங்க 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை வங்கி வழங்கியது. 

டெஸ்லா பங்குகளின் மூலம் வங்கிகள் அவருக்கு மேலும் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. கூடுதலாக, தனது சொந்த பணத்தையும் அவர் செலுத்தியுள்ளார். உறுதிமொழிகளை காட்டிலும் தனது தொலைநோக்கு பார்வையின் மூலமாகவே அவர் வங்கிகளுக்கு நம்பிக்கை ஊட்டியதாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். ட்விட்டர் சொந்தமான பிறகு அவர் எந்த அளவுக்கு செலவுகளை குறைப்பார் என்பது தெளிவற்றதாக உள்ளது. 

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஊதியத்தை குறைப்பதன் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com