
பாகிஸ்தானில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து கோயில் மீண்டும் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் உள்ள அனார்கலி பஜாரில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து வழிபாட்டுத் தளமான வால்மீகி கோயில் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பும் அக்கோயிலில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பின், கிரிஸ்துவ குடும்பம் ஒன்று தங்களுக்கு சொந்தமான இடத்தில் கோயில் அமைந்துள்ளது என அப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இதையும் படிக்க: தாய்லாந்து: மதுபான விடுதியில் தீ விபத்து; 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்
இந்நிலையில், இதனை அறிந்த பாகிஸ்தான் சிறுபான்மை வழிபாட்டு மேற்பார்வை அமைப்பு ஒன்று சட்டரீதியாக வழக்கை நடத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக அக்குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கோயிலை மீட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று அக்கோயில் திறக்கப்பட்டதும் உள்ளூரில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட ஹிந்து, முஸ்லீம், கிரிஸ்துவ மற்றும் சீக்கிய மதத் தலைவர்கள் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதுடன் பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும், 1,200 ஆண்டுகள் பழமைகொண்ட கோயில் மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஹிந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.