
கோப்புப் படம்
ஆகஸ்ட் 24ஆம் தேதி உக்ரைன் சுதந்திர நாளன்று கார்கிவ் பகுதியில் பயங்கர தாக்குதல் நதத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா முதலில் முயன்றாலும், தற்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்களிடம் வீழாமல் உள்ள பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 24ஆம் தேதி உக்ரைன் சுதந்திர தினந்தன்று கார்கிவ் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்த ருஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மக்கள் அனைவரும் வரும் நாட்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...