ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக பிரிட்டன் இருக்கும்: ரிஷி சுனக்

உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக பிரிட்டன் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 

News image
ரிஷி சுனக்
Updated On :24 ஆகஸ்ட் 2022, 12:36 pm

DIN


உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக பிரிட்டன் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் நாடு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைனின் உறுதியான மன தைரியத்தை பாராட்ட வேண்டும். பிரிட்டன் உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், வணிக உறவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது நம்மை மேலும் வளப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

ரஷியா மீது உக்ரைன் போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுறுவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.