நெட்பிளிக்ஸிலும் இனி விளம்பரம்: விரைவில் அறிமுகம்?

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நெட்பிளிக்ஸிலும் இனி விளம்பரம்: விரைவில் அறிமுகம்?

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிளிக்ஸ் பல்வேறு நாடுகளில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள் ஒருதளத்தில் கிடைப்பதால் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை உள்ளது.

இந்நிலையில் இதுவரை  விளம்பரங்களற்ற தளமாக இருந்துவந்த நெட்பிளிக்ஸ் விரைவில் மற்ற தளங்களைப் போல் விளம்பரங்களை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்காக விளம்பரங்களுடன் கூடிய சந்தாதாரர் திட்டத்தை அமல்படுத்த உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாதாந்திர சந்தா தொகையாக இந்திய மதிப்பில் ரூ.500 முதல் ரூ.600 வரை கட்டணமாக நிர்ணயிக்க உள்ளதாகத் தெரிகிறது. 

இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகின் 6க்கும் மேற்பட்ட நாடுகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

திரைப்படத்தின் தொடக்கம் மற்றும் இடைப்பகுதியில் விளம்பரங்கள் வெளியாகும் வகையில் இந்த சந்தா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com