சீனாவில் அச்சுறுத்தும் கரோனா பாதிப்பு...  எகிறும் எலுமிச்சை விலை!

சீனாவில் அச்சுறுத்தும் கரோனா பாதிப்பு...  எகிறும் எலுமிச்சை விலை!

சீனா முழுவதும் கரோனா நோய்த்தொற்று தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


சீனா முழுவதும் கரோனா நோய்த்தொற்று தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குளிர்காலங்களில் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமாகும் என சீன தொற்றுநோய் நிபுணர் கூறியிருந்த நிலையில், மக்கள் அனைவரும் இயற்கை மருந்துகளை நாடி வருவது அதிகரித்துள்ளது.

உலகின் மற்ற நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, 2019 ஆம் ஆண்டில் இருந்தே நாடு முழுவதும் மக்களை கரோனா நோய்த்தொற்றிலிருந்து விலக்கி வைக்க கடுமையான ‘பூஜ்ய கரோனா’ கொள்கையை விடாப்பிடியாக கடைபிடித்து வந்தது. இந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டது. 

இதையடுத்து அந்த நாட்டில் கரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் சீனாவின் சந்திர புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், அங்கு மக்கள் அதிகளவில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். இதனால் தொற்று பரவல் மிகவும் தீவிரமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட குறைந்த நோய்த்தடுப்புத் திறன் கொண்ட கரோனா தடுப்பூசிகளை செலுத்தியவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர் அதிகயளவில் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களால் நோயால் பாதிக்கப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடும் என தொடர் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. 

இந்நிலையில், தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் சீனாவில், தொற்று நோயைக் குணப்படுத்த மக்கள் இயற்கை மருந்துகளை நாடி வருவது அதிகரித்துள்ளதால், எலுமிச்சையின் தேவையும், விலையும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதாவது கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டதை அடுத்து தொற்று பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல மாகாணங்களில் எலுமிச்சையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும், தேவையும் அதிகரித்துள்ளதாக சீன விவசாயிகள் தெரிவித்தனர். 

பெய்ஜிங் போன்ற பெரிய நகரங்களில் எலுமிச்சையின் தேவைகள் அதிகரித்துள்ளன. மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்களைப் பெற உணவுகள் போன்ற இயற்கையான பொருள்களை நாடுவது அதிகரித்துள்ளது. இதனால் அரை கிலோ ரூ.23.76-க்கு விற்கப்பட்டு வந்த எலுமிச்சையின் விலை தற்போது சுமார் ரூ.71.88 ஆக விற்கப்படுகிறது.

இதேபோன்று ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட பிற பழங்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. ஏனெனில் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது இந்த பழங்கள் பசியை மேம்படுத்தும் என்று சீனர்கள் சிலர் நம்புகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com