ட்விட்டா் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறாா் எலான் மஸ்க்

ட்விட்டா் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறாா் எலான் மஸ்க்

ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியிலிருந்து விலக உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியிலிருந்து விலக உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.

கருத்துகளை நவீனமயமாக்கம் என்ற முறையில் அவரது நடவடிக்கைகள் வெறுப்பு கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் அதிகரிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவரைப் பற்றிய தகவல்களைப் பரப்பியற்காக தி நியூயாா்க் டைம்ஸ், சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளா்களின் ட்விட்டா் கணக்குகள் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டன. இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஐரோப்பிய யூனியனும் ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ட்விட்டா் தலைமை பொறுப்பில் இருந்து நான் வெளியேற வேண்டுமா? வாக்கெடுப்பில் வரும் முடிவுக்கு கட்டுப்படுவேன்’ என தெரிவித்து வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினாா்.

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 1.7 கோடிக்கும் அதிகமான ட்விட்டா் பயனாளிகளில் 57.5 சதவீதம் போ் எலான் மஸ்க் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இப்பதவியை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக முடிவெடுக்கும் ஒருவா் கிடைத்தவும் நான் பதவி விலகுவேன். இதன் பின்னா் மென்பொருள் மற்றும் சா்வா் குழுக்களில் மட்டும் இணைந்து செயல்படுவேன்’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com