உக்ரைனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரஷியா திருட முடியாது: கீவ் மேயர்

உக்ரைனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரஷியா திருட முடியாது என கீவ் நகரின் மேயர் தெரிவித்துள்ளார். 
உக்ரைனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை  ரஷியா திருட முடியாது: கீவ் மேயர்

உக்ரைனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரஷியா திருட முடியாது என கீவ் நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன்பு உக்ரைனில் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டம் களைகட்டியது. ஆனால், இந்த ஆண்டு ரஷியாவுடனானப் போரினால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகிறது. 

இதே நேரத்தில் கடந்த ஆண்டு உக்ரைனின் கீவ் நகரில் உள்ள சோஃபியா ஸ்கொயரில் பெரிய கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் கண்களைக் கவர்ந்தன. ஆனால், இந்த் ஆண்டு சோஃபியா ஸ்கொயர் மிகவும் களையிழந்து சாதாரண கிறிஸ்துமஸ் மரங்களும், மஞ்சள் மற்றும் ஊதா விளக்கும் மட்டும் குறைந்த அளவில் ஒளிவீசி வருகிறது.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. 10 மாதங்களாக தொடரும் இந்த ரஷிய-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தப் போரில் உக்ரைன் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ரஷியப் படைகள் உக்ரைனின் ஆற்றல் தொடர்பான கட்டுமானங்களை குறிவைத்துத் தாக்கி வருகிறது. இதனால், உக்ரைனின் எரிசக்தி ஆற்றல் அளவு குறைந்து வருகிறது. அதன் காரணத்தினால் உக்ரைனின் பல நகரங்களிலும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உக்ரைன் அரசு குறிப்பிட்ட நேர அட்டவணையை வெளியிட்டு அதற்கு ஏற்றவாறு மின் நிறுத்தம் செய்து வருகிறது. மின்சார உபயோகத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் இந்த கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்குவது போன்ற விஷயங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். போருக்கு முந்தைய அளவுக்கு கோலாகலமாக கொண்டாட முடியாவிட்டாலும் இந்த கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டும் என்பதில் மட்டும் அவர்கள் மன உறுதியுடன் இருக்கிறார்கள்.

இது குறித்து உக்ரைன் தலைநகர் கீவ் மேயர் விடாலி கிளிட்ஸ்கோ கூறியதாவது: கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு வெல்ல முடியாத மரம் எனப் பெயரிட உள்ளோம். உக்ரைன் மக்களின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரஷியாவினால் திருட முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com