

சீனாவில் புதிய கரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:
இதுவரை இல்லாத வகையிலான புதிய கரோனா நெருக்கடியை நாடு எதிா்கொண்டுள்ளது. எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் அதனை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
தேசப் பற்றுடன், இலக்குகளை தீா்க்கமாக முடிவு செய்து அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் ஷின்பிங் குறிப்பிட்டுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று சீனாவில்தான் முதல்முதலில் தோன்றினாலும், கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக அங்கு அந்த நோய் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், கரோனா கெடுபிடிகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடா்ந்து அங்கு அந்தக் கட்டுப்பாடுகள் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நோய் வெகு வேகமாகப் பரவி வருகிறது. இது, சா்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.