
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 39.82 கோடியைக் கடந்துள்ளது.
இன்றைய பாதிப்பு நிலவரம்
உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 39,82,41,445-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 57,69,246 போ் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 31,78,68,140 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 7,53,76,780 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,373 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,37,0,774 ஆகவும், பலி எண்ணிக்கை 9,28,879 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,39,611-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,04,078 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,66,05,137 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,32,720 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...