
மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்ற சூழல் நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா, தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறிய அவர், இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Under the present circumstances, I must change my appeal:
— António Guterres (@antonioguterres) February 24, 2022
President Putin, in the name of humanity, bring your troops back to Russia.
This conflict must stop now.