
கோப்புப்படம்
வாஷிங்டன்: உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதல் ரஷிய படைகள் தாக்குதல் நடத்திவருவதன் எதிரொலியாக, யுடியூப், முகநூலைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனமும் ரஷிய ஊடகங்கள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதைதைத் தொடர்ந்து, ரஷிய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் ஊடகங்கள், பேஸ்புக் மூலம் பெரும் அனைத்து விளம்பர வருமானத்திற்கு அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதனை பேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் ட்விட்டரில் முதலில் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷிய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் ஊடகங்கள், யுடியூப் இணையதளங்கள் மற்றும் விடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பெரும் அனைத்து விளம்பர வருமானத்திற்கு யுடியூப் அதிகாரப்பூர்வமாக சனிக்கிழமை தடை விதித்தது. இதனை யுடியூப் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலை அங்கீகரித்ததற்கு பதிலடியாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், யுடியூப்பைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் ரஷியாவைச் சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
அதாவது, கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான ஆப்கள் மற்றும் யுடியூப் உள்ளிட்டவற்றிலும் ரஷிய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.
கூகுள் இணையதளத்தில் யுடியூபில் அரசு மற்றும் தனியார் ஊடகங்களின் விடியோக்களுக்குள் இடம்பெறும் விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்களை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர் மைக்கேல் அசிமென் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | வளர்ப்பு நாயை விட்டுவிட்டு வர மறுக்கும் மாணவர்...போர் மூண்ட உக்ரைனில் நெகிழ்ச்சி