புதினுக்கு பாராட்டு...ஜுக்கர்பெர்க் குறித்து சர்ச்சையான கருத்துகள்...டிரம்பின் சரவெடி உரை

உக்ரைன் தலைநகர் கிவ்வில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
Published on
Updated on
1 min read

தீவிர அரசியலிலிருந்து தனித்து விடப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், உக்ரைன் விவகாரத்தில் அதிபர் பைடன் மற்றும் நேட்டோ மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் குறித்து பொய் தகவல்களை பரப்பிவரும் அவர், குடியரசு கட்சி தொண்டர்களிடம் மீண்டும் அதுகுறித்து பேசியுள்ளார்.

புளோரிடா ஆர்லாண்டோவில் நடைபெற்ற பழமைவாத அரசியல் நடவடிக்கை ஆண்டு மாநாட்டில் கிட்டத்தட்ட 86 நிமிடங்கள் பேசினார். எப்போதும் போல தீவிர இடதுசாரி கொள்கை குறித்து விமரிசித்த அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

உக்ரைன் தலைநகர் கிவ்வில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதிபர் பைடன் குறித்து விமரிசித்த அவர், புதின் குறிந்து புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அனைவரும் புரிந்து கொண்டபடி, நமது தேர்தலில் முறைகேடு நடந்திருக்காவிட்டால், இந்த பயங்கரமான பேரழிவு நடந்திருக்காது. புதின் புத்திசாலி என்பதில் பிரச்னை இல்லை, நிச்சயமாக அவர் புத்திசாலி. ஆனால் உண்மையான பிரச்னை என்னவென்றால், நமது தலைவர்கள் ஊமைகளாக இருக்கிறார்கள்.

ரஷியாவை உளவியல் ரீதியாக சுக்கு நூறாக உடைக்காமல் அவர்கள் மீது பொருளாதார தடைகள் விதித்ததன் மூலம் புத்திசாலித்தனத்திற்கு நேர் மாறாக நேட்டோ செயல்பட்டுள்ளது" என்றார்.

டிரம்பின் பேச்சை குடியரசு கட்சி ஆதரவாளர்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் கேட்டனர். அடுத்த தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று நான்கு ஆண்டு ஆட்சி செய்ய வேண்டும் என கரகோஷம் எழுப்பினர். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com