பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அதை நிராகரித்துள்ளார். பெலாரஸ் அரசும் ரஷியா படையெடுக்க உதவியுள்ளதால் அங்கு பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என அவர் கூறியுள்ளார்.
ஆனால், மற்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் அதில் கலந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு ஆகிய இடங்களை பேச்சுவார்த்தைக்காக முன்மொழிந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் கோமல் நகரில் உக்ரைன் அதிகாரிகளை சந்திக்க தயார் என ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.
போர் நான்காம் நாளை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நிலம், வான், கடல் என உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பாகவே, பிரிட்டன், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகள், தங்களின் தூதரக அலுவலர்களை உக்ரைனிலிருந்து வெளியேற்றியது. போர் சூழம் அபாயம் இருப்பதால் மக்கள் வெளியேறும்படி வலியுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய புரட்சி! விஜய்க்கு வாழ்த்துக்கள்! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK

முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவா?
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


