பள்ளிகள், ஆம்புலன்ஸ் என அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தும் ரஷியா: உக்ரைன்

ராணுவ கட்டமைப்பு இல்லாத நகர மாவட்டங்களில் கூட ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷியா படைகள் தாக்குதல் நடத்திவருவதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி புகார் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர்

உக்ரைனில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட ரஷியா குண்டுகளை வீசிவருவதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேற்கு உலக நாடுகளுக்கு ஆதரவாக இருந்துவரும் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், ஸெலென்ஸ்கி புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய விடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "உக்ரைனில் கடந்த இரவு கொடூரமாக இருந்தது. மீண்டும் துப்பாக்கிச் சூடு, குடியிருப்புப் பகுதிகள், பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளின் மீது மீண்டும் குண்டுவீசப்பட்டது. 

இன்று, நாட்டை ஆக்கமிரத்தவர்கள், ஏற்றுக்கொள்ளாத இலக்காகக் நாட்டில் ஒரு விஷயம் கூட இல்லை. அவர்கள் அனைவருக்கும் எதிராக போராடுகிறார்கள். அனைத்து உயிரினங்களுக்கு எதிராகவும் சண்டை செய்கிறார்கள். மழலையர் பள்ளிகளுக்கு எதிராக, குடியிருப்பு கட்டிடங்களுக்கு எதிராக ஆம்புலன்ஸ்களுக்கு எதிராகவும் போராடுகின்றனர். 

ராணுவ கட்டமைப்பு இல்லாத நகர மாவட்டங்களில் கூட ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷியா படைகள் தாக்குதல் நடத்திவருகிறது. வாசில்கிவ், கிவ், செர்னிகிவ், சுமி, கார்கிவ் மற்றும் உக்ரைனில் உள்ள பல நகரங்களில் இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com