ரஷியா - உக்ரைன் இடையே முதல்கட்டப் பேச்சு: போரை நிறுத்தக் கோரிக்கை

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் கோமல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உக்ரைன் - ரஷியா போருக்கு இடையே பெலாரஸ் நாட்டிலுள்ள கோமல் பகுதியில் (பிப். 28) நடைபெறும் அமைதிக்கான தொடக்க நிலைப் பேச்சில் ரஷிய மற்றும் உக்ரேனியப் பிரதிநிதிகள்.

இதில் போர் நிறுத்தத்தை ரஷியா உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் ராணுவப் படைகளை உடனடியாகத் திருமப் பெற வேண்டும் எனவும் உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி முதல் போர் ரஷிய ராணுவம் நுழைந்து போரில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் அனைத்து எல்லைகளிலும் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்துடன் அந்நாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் போரிட்டு வருகின்றனர். 

நேட்டோ படையில் உக்ரைன் இணைந்ததற்கான எதிர்வினையாக ரஷியா இந்தப் போரிடைத் தொடங்கியது. இதற்கான பேச்சுவார்த்தைக்கும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பி விடுத்தார். ஆனால் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு முன்வர மறுத்துவிட்டார்.

போர்ச்சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று 5வது நாளை எட்டியுள்ள நிலையில், பொதுவானப் பகுதியான பெலாரஸ் நாட்டின் கோமல் பகுதியில் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு ஸெலன்ஸ்கி ஒப்புதல் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை முதல் ரஷியா - உக்ரைன் நாட்டின் உயர் அதிகாரிகள் முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பேசிய உக்ரைன் பிரதமர் ஆலோசகர் மைகைலோ போடோலைக், உக்ரைனிலிருந்து ரஷியப்படைகள் திரும்பப் பெற வேண்டும் என்பதே இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் கலந்துகொண்டதற்கான நோக்கம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com