துபைக்கு செல்ல முயன்ற பசில் ராஜபட்ச: சுற்றிவளைத்த பயணிகள்; என்ன நடந்தது?

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச துபைக்கு தப்பியோட முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபட்ச
பசில் ராஜபட்ச

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச துபைக்கு தப்பியோட முயற்சி செய்தார்.

இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தநிலையில்,  அதிபர் பதவியை நேற்று ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகவும் இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் அபேவர்த்தன தெரிவித்தார். ஆனால், அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பேசுகையில், கோத்தபய ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இரத்னமாலா விமான தளத்திலிருந்து இரண்டு பெல்412 ஹெலிகாப்டர்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியறி அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகக் கூறினார்.

அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர் துபையில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், கோத்தபய ராஜபட்சவின் சகோதரரும் இலங்கையின் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபட்ச இன்று அதிகாலை 12.30 மணி அளவில் கொழும்பு விமான நிலையத்திலிருந்து துபைக்கு தப்பிச் செல்ல இருந்ததார். பின் அங்கிருந்த பயணிகள் அவரை அடையாளம் கண்டு விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்திற்குப் பின் பேசிய விமான சேவை கூட்டமைப்பின் தலைவர் கே.ஏ.எஸ். கனுகாலா  ‘ஐரோப்பா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளோம்’ என அறிவித்துள்ளார். 

முன்னதாக. பொருளாதார நெருக்கடி அதிகரித்ததும் பசில் ராஜபட்சவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com