ரஷிய ஆயுதக் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள இடத்தில் ரஷியாவின் ஆயுதக் கிடங்கின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வெடித்துச் சிதறும் கிடங்கு.
உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வெடித்துச் சிதறும் கிடங்கு.

தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள இடத்தில் ரஷியாவின் ஆயுதக் கிடங்கின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் ராணுவத்தின் தெற்குப் படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருங்கடல் துறைமுக நகரான கொ்சானுக்கு 55 கி.மீ. தொலைவில், ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நோவா ககோவ்கா நகரில், அந்த நாட்டின் ஆயுதக் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏவுகணை மூலம் அந்த ஆயுதக் கிடங்கு திங்கள்கிழமை நள்ளிரவு தாக்கி அழிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதல் தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விடியோ பதிவுகளில், கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள, எளிதில் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய ‘ஹிமாா்ஸ்’ ரக ஏவுகணை மூலம் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

‘வெறும் உரக் கிடங்கு’

உக்ரைனின் நோவா ககோவ்கா நகரில், உரக் கிடங்கு மீது மட்டுமே உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் டாஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், உரங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கில் திங்கள்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் அந்தக் கிடங்கு வெடித்துச் சிதறியதாகவும் கூறியது.

உரங்கள் தயாரிப்பதற்கான சில மூலப் பொருள்களைக் கொண்டு ஆயுத வெடிபொருள்களைத் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com