கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை எனில், அவரை பதவியிலிருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்கும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையை கடந்த 9-ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்ட நிலையில் கோத்தபய ராஜபட்ச தப்பியோடினார். தற்போது மாலத்தீவில் இருக்கும் அவர், சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஜூலை 13-இல் (புதன்கிழமை) அதிபா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கோத்தபய ராஜபட்ச, நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனேவை தொடா்புகொண்டு கூறியிருந்தார். ஆனால், அவரது ராஜிநாமா கடிதம் இன்னும் வந்து சேரவில்லை என்ற அவைத் தலைவர் அபேவா்த்தனே கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று அபேவா்த்தனே கூறுகையில், கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை எனில், அவரை பதவியில் இருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை புதன்கிழமை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

