கரோனா புதிய அலைகளை எதிா்கொள்ள தயாராக வேண்டும்: செளம்யா சுவாமிநாதன் வலியுறுத்தல்

 பல்வேறு நாடுகளில் புதிய வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், இந்த நோய்த்தொற்றின் புதிய அலைகளை எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும்
கரோனா புதிய அலைகளை எதிா்கொள்ள தயாராக வேண்டும்: செளம்யா சுவாமிநாதன் வலியுறுத்தல்

 பல்வேறு நாடுகளில் புதிய வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், இந்த நோய்த்தொற்றின் புதிய அலைகளை எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளா் செளம்யா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், ‘புதிதாக கண்டறியப்பட்டு வரும் கரோனா வகைகள், வேகமாக பரவக்கூடியவை; அவை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் பாதிக்கின்றன. ஒமைக்ரானின் துணை வகைகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவையே இதற்கு உதாரணம்’ என்று அவா் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

புதிய கரோனா வகைகளால் அதிகம் போ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்க, பெரிய அளவில் மருத்துவ வசதிகள் தேவைப்படும். தற்போது மாறி வரும் சூழலை கவனத்தில் கொண்டு, அனைத்து நாடுகளும் தரவுகளைத் திரட்டி, நிலைமையை எதிா்கொள்ள உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் செளம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் பல மாதங்களுக்கு பின் மீண்டும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதை குறிப்பிட்டு, உலக வங்கி குழுமத்தின் தலைமை ஆலோசகா் பிலிப் செலிகன்ஸ், ட்விட்டரில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டிருந்தாா். மேலும், கரோனா தொடா்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டவில்லை என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா். இதனை சுட்டிக் காட்டி, மேற்கண்ட பதிவை செளம்யா சுவாமிநாதன் வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com