வெறுப்பை விதைக்கும் சமூக ஊடகங்கள்: மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் இணையக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் சரிவர உயர்ந்துவருகின்றன.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி முகநூலில் 37.82 சதவிகிதமும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 86 சதவிகிதமும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

மே 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முகநூல் தளத்தில் ஏப்ரல் மாதத்தில் 53,200 வெறுப்புப் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இதுவே மார்ச் மாதத்தில் பதிவான 38,600 பதிவுகளை ஒப்பிடும்போது 37.82 சதவீதம் அதிகமாகும்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் மார்ச் மாதத்தில் 41,300 ஆக இருந்த வெறுப்புப் பதிவுகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 77,000 பதிவுகளாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com