அமெரிக்காவில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம்: வெகு விமரிசையாக நடத்தும் திருப்பதி தேவஸ்தானம்

அமெரிக்காவின் ஆறு நகரங்களில், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவத்தை ஜூன் 18 -  ஜூலை 9 வரை  வெகு விமரிசையாக நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம்: வெகு விமரிசையாக நடத்தும் திருப்பதி தேவஸ்தானம்
அமெரிக்காவில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம்: வெகு விமரிசையாக நடத்தும் திருப்பதி தேவஸ்தானம்


திருப்பதி: அமெரிக்காவின் ஆறு நகரங்களில், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவத்தை ஜூன் 18 -  ஜூலை 9 வரை  வெகு விமரிசையாக நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, கரோனா பேரிடர் காரணமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் திருமலை திருப்பதிக்கு வர முடியாமல் போனது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வாழும் திருமலை பக்தர்களின் விருப்பத்தை முன்னிட்டு, ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்த மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அமெரிக்காவின் சான் பிரான்ஸிகோவில் ஜூன் 18ஆம் தேதியும், ஸீட்டிலில் 19ஆம் தேதியும், டல்லாஸ் பகுதியில் 25ஆம் தேதியும், செயின்ட் லூயிஸில் 26ஆம் தேதியும் சிகாகோவில் 30ஆம் தேதியும், நியூ ஜெர்ஸியில் ஜூலை 2ஆம் தேதியும் வாஷிங்டன் டிசி யில் 3ஆம் தேதியும், அட்லாண்டாவில் 9அம் தேதியும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது.  

மேலும் சில நாடுகளிலிருந்தும், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவத்தை நடத்திக் கொடுக்க விருப்பங்கள் வந்துள்ளன. அது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com