போரில் ரஷிய வீரர்கள் 32,950 பேர் பலி: உக்ரைன்

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 32,950 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் பாதுக்காப்புத் துறை தெரிவித்துள்ளது. 
போரில் ரஷிய வீரர்கள் 32,950 பேர் பலி: உக்ரைன்

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 32,950 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் பாதுக்காப்புத் துறை தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி நாங்கு மாதங்களை எட்டியுள்ளது. படிப்படியாக உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியப்படை கைப்பற்றி வருகிறது. 

இருதரப்பிலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வரமறுப்பதாக ரஷியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், உக்ரைனில் ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு ரஷியா தன்னுடைய படையைத் திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று உக்ரைன் கூறுகிறது. இதனால் பேச்சுவார்த்தையும் இழுபறி நிலையிலே இருக்கிறது. 

உக்ரைனின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததுடன் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள சியெவெரோடொனட்க்ஸ் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. தங்கள் நாட்டுப் படையினருக்கு உதவுவதற்காக, கூடுதல் படையினரையும் ரஷியா அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மேலும்  1,449 ஆயுதப் போர் டாங்கிகள், 3,545 போர் கவச வாகனங்கள், 729 பீரங்கி அமைப்புகள், 97 வான் பாதுகாப்பு அமைப்புகள், 213 போர் விமானங்கள், 179 ஹெலிகாப்டர்கள், 129 கப்பல் ஏவுகணைகள், 13  போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ரஷிய தரப்பு இழப்புகளின் பட்டியலையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com