கொலம்பியா: உருளைக்கிழங்கு வடிவில் போதைப் பொருள் கடத்தல்

வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்ட  1,300 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவிலான போதைப் பொருட்களை கொலம்பியா காவல் துறை பறிமுதல் செய்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்ட  1,300 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவிலான போதைப் பொருட்களை கொலம்பியா காவல் துறை பறிமுதல் செய்துள்ளனர்.
 
போதைப் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கடத்துவதற்கு இது போன்ற புதுமையான யுக்திகளை கடத்தல்காரர்கள் கையாண்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யும் விடியோ ட்விட்டரில் கொலம்பியா பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “ போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உருளைக் கிழங்கு போல் குளிர்சாதனப் பெட்டியில் கடத்தி செல்லப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப் பொருள்கள் ஸ்பெயினுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த திஹார் சிறையில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து சிறைத் துறை அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் குழுவை சிறையில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com