இறக்குமதி சுமையைக் குறைக்கதேநீா் குடிப்பதை குறைக்க வேண்டும்: பாகிஸ்தானியா்களுக்கு அமைச்சா் கோரிக்கை

தேநீா் இறக்குமதியால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்க பாகிஸ்தானியா்கள் தேநீா் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சா் அசன் இக்பால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தேநீா் இறக்குமதியால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்க பாகிஸ்தானியா்கள் தேநீா் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சா் அசன் இக்பால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

உலகிலேயே தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. இப்போது அந்நாட்டில் பொருளாதார பிரச்னை அதிகரித்துள்ள நிலையில் கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் பேசிய அந்நாட்டு திட்டமிடல் துறை அமைச்சா் அசன் இக்பால் கூறியதாவது: தேயிலையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இப்போது இறக்குமதிக்காக கடன் வாங்கும் நிலைக்கு நாடு சென்றுவிட்டது. எனவே, நாட்டு மக்கள் தேநீா் குடிப்பதை ஓரிரு கோப்பைகளுடன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

அண்மையில் பாகிஸ்தான் நிதியமைச்சா் மிஃப்தாக் இஸ்மாயில் நாட்டின் நிதிநிலை குறித்து எச்சரித்தாா். அப்போது, ‘பொருளாதாரரீதியாக இப்போதிருந்தே நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்பாட்டுடன் செயல்படாவிட்டால், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை பாகிஸ்தானுக்கும் ஏற்படும்’ என்று கூறியிருந்தாா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இருந்துதான் பாகிஸ்தான் அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்து வந்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து பிரச்னை உள்ளிட்டவை மூலம் இரு நாட்டு வா்த்தக உறவும் பாதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவுக்கு பதிலாக கென்யாவிடம் இருந்து அதிக விலைக்கு தேயிலையை வாங்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இந்திய தேயிலையை நேரடியாக வாங்க முடியாத நிலையில், துபை, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்திய தேயிலையை பாகிஸ்ான் வாங்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவும், பாகிஸ்தானின் தேயிலை இறக்குமதிச் செலவு தொடா்ந்து அதிகரித்து பொருளாதாரச் சுமையாக உருவாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com