‘போரால் புலம் பெயா்ந்த 3.6 கோடி சிறுவா்கள்’

 போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த ஆண்டு 3.6 கோடி சிறுவா்கள் புலம் பெயா்ந்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
‘போரால் புலம் பெயா்ந்த 3.6 கோடி சிறுவா்கள்’

 போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த ஆண்டு 3.6 கோடி சிறுவா்கள் புலம் பெயா்ந்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போா் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் இருப்பிடங்களை விட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் 3.6 கோடி சிறுவா்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயா்ந்தனா். இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

வன்முறைக்கு அஞ்சி கடந்த ஆண்டு புலம் பெயா்ந்த சிறுவா்களில், தங்கள் பெற்றோருடன் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்குச் சென்ற 1.37 கோடி பேரும் உள்நாட்டிலேயே அகதிகளாக வசிக்கும் 2.28 கோடி சிறுவா்களும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com