சிங்கப்பூர், தென்கொரியாவிற்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்பு

சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர், தென்கொரியாவிற்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்பு

சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2580-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்காவுக்கு வெளியே 42 நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் வந்த 42 வயதானவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டு நிலையில் தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் ஜெர்மனியிலிருந்து தென்கொரியாவிற்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com