ரஷியா பொருளாதாரப் போரைச் சந்திக்க நேரிடும்: பிரான்ஸ் நிதியமைச்சர்

உக்ரைனுக்கு எதிரான ஆயுதப் போரை தொடுத்துள்ள ரஷியா விரைவில் பொருளாதாரப் போரை சந்திக்க நேரிடும் என்று பிரான்ஸ் நிதியமைச்சர் புரூனோ லீ மைரி எச்சரித்துள்ளார். 
ரஷியா பொருளாதாரப் போரைச் சந்திக்க நேரிடும்: பிரான்ஸ் நிதியமைச்சர்

உக்ரைனுக்கு எதிரான ஆயுதப் போரை தொடுத்துள்ள ரஷியா விரைவில் பொருளாதாரப் போரை சந்திக்க நேரிடும் என்று பிரான்ஸ் நிதியமைச்சர் புரூனோ லீ மைரி எச்சரித்துள்ளார். 

உக்ரைன் மீது போர்த்தொடுத்திருக்கும் ரஷியா மீது ஏராளமான நாடுகள் வணிகப் போக்குவரத்தைத் துண்டித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே ரஷியாவுடன் செய்துகொண்ட வணிக ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகள் நீக்கியுள்ளன.

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுறுவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே பெலாரஸ் நாட்டின் கோமல் பகுதியில் ரஷியா - உக்ரைன் இடையே ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் இதில் போரை கைவிடுவதற்கான எந்தவித முன்னேற்ற நடவடிக்கைகளும் எட்டப்படவில்லை.

இன்று 6வது நாளாக ரஷிய ராணுவப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகரான கீவ்வில் அனைத்துப் பகுதிகளையும் ராணுவத்தினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பெரிய நகரான கார்கீவ் பகுதியிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நிதியமைச்சர் புரூனோ லீ மைரி, உக்ரைன் மீது ஆயுதப்போரை நடத்தி வரும் ரஷியா பொருளாதாரப்போரை சந்திக்க உள்ளது. தனது நாட்டின் பொருளாதாரம் சீரழிவதை ரஷியா பார்க்கவுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளால் பொருளாதாரப் போரை ரஷியா சந்திக்கவுள்ளது என்று எச்சரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com