‘ஒற்றுமையை உடைக்க முடியாது’: உக்ரைன் அதிபர்

எங்களின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
‘ஒற்றுமையை உடைக்க முடியாது’: உக்ரைன் அதிபர்

எங்களின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு கட்டடங்கள் மீது ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக பங்குபெற்ற உக்ரைன் அதிபர் பேசியதாவது:

ரஷிய கூட்டமைப்பு 5வது நாளாக முழு அளவிலான தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் பலியாகியுள்ளனர்.

மக்களில் சிலருக்கு இந்த நாள் நல்ல நாளாக இல்லை, சிலருக்கு இந்த நாள்தான் கடைசி நாளாக உள்ளது. சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக உக்ரைன் மக்கள் உயிரைத் தியாகம் செய்து வருகின்றனர்.

ஐரோப்பியாவில் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும் கீவ் நகரிலுள்ள சுதந்திர சதுக்கத்தின் மீது ரஷிய ராணுவத்தினர் இன்று இரு ஏவுகணைகளை வீசியதில், நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

எங்கள் மண்ணுக்காக, சுதந்திரத்திற்காக உக்ரைன் மக்கள் உயிர்களை தியாகம் செய்து வருகின்றனர். உக்ரைனின் அனைத்து நகரங்களும் யாரும் நுழையாதபடி தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

யாராலும் எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதன் மூலம் மேலும் பலம் பெறும் எனப் பேசினார்.

உக்ரைன் அதிபரின் பேச்சுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com