ஐரோப்பியாவில் சைபர் தாக்குதல்...இணையம் இல்லாமல் தவிக்கும் மக்கள்

ஐரோப்பியாவில் சைபர் தாக்குதல்...இணையம் இல்லாமல் தவிக்கும் மக்கள்
சைபர் தாக்குதல்கள்
சைபர் தாக்குதல்கள்

ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் இணைய சேவை இன்றி தவித்துவருகின்றனர். உக்ரைன் மீது ரஷிய போர் தொடுத்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற சைபர் தாக்குதல் காரணமாக பிரான்ஸில் நார்ட்நெட் சேவையை பயன்படுத்தி வந்த 9,000 சந்தாதாரர்கள் இணையம் இன்றி தவித்தனர் என அமெரிக்க செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஆரஞ்சு தெரிவித்திருந்தது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி, கிரீஸ், இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளில் யூடெல்சாட் இணைய சேவையை பயன்படுத்தி வந்த 40,000 பயனாளர்களில் மூன்றில் இணைய தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன், ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு பகுதிகளில்  கேஏ - எஸ்ஏடி செயற்கைக்கோள் மூலம் சேவை பெற்றுவந்த பயனாளர்களில் ஒரு பிரவினர் சைபர் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக வியாசட் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

இதுகுறித்து முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், காவல்துறையினர், மற்றும் கூட்டு நிறுவனங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாணைக்கு உதவி வருவதாகவும் வியாசட் குறிப்பிட்டுள்ளது.

இணைய தடை குறித்து பிரான்ஸ் விண் படை தலைவர் ஜெனரல் மைக்கேல் ஃப்ரைட்லிங் கூறுகையில், "பல நாட்கள், சேவையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஐரோப்பிய மற்றும் உக்ரைனை உள்ளடக்கிய செயற்கைக்கோள் வலையமைப்பு சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான டெர்மினல்கள் தாக்குதலுக்குப் பிறகு செயல்படவில்லை" என்றார்.

ஜெர்மனியில் இணைய சேவை இன்றி கிட்டத்தட்ட 5,800 காற்று விசையாழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய ஐரோப்பியாவில் 11 கிகாவாட்ஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com