அணு ஆயுதங்களை தயார் செய்துவரும் உக்ரைன்...பகீர் கிளப்பும் ரஷியா

படையெடுப்புக்கு முன்பு பேசிய புதின், சோவியத் கற்று தந்த நடைமுறை பயற்சியின் மூலம் உக்ரைன் அணு ஆயுதங்களை தயார் செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புளூட்டோனியத்தை கொண்டு அணு ஆயுதங்களை தயார் செய்யும் பணியை உக்ரைன் கிட்டத்தட்ட நெருக்கிவிட்டதாக ரஷிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. 

மேற்குகல நாடுகளுக்கு ஆதரவாக இருந்துவரும் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் புதின் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உத்தரவிட்டார். நேட்டோவில் சேருவதை தடுக்கும் வகையிலும் 'நாஜிக்களை' வீழ்த்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

இதை முற்றிலுமாக மறுத்த மேற்குலக நாடுகள், ரஷியா மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ராணுவ மற்றும் பிறவு உதவிகளை உக்ரைனுக்கு வழங்கிவருகிறது. 

இதற்கு மத்தியில், உக்ரைன் அணு ஆயுதங்களை தயார் செய்துவருவதாக டிஏஎஸ்எஸ், ஆர்ஐஏ மற்றும் இன்டர்பேக்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. கடந்த 2000ஆம் ஆண்டு மூடப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையத்தில் உக்ரைன் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக அதில் கூறப்பட்டது. இதை ரஷியாவின் அதிகாரமிக்க நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணுமின் நிலையத்தை சமீபத்தில் ரஷியா கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு கடந்த 1994ஆம் ஆண்டு, அணு ஆயுதங்களை தயார் செய்யப்போவதில்லை உக்ரைன் அறிவித்தது. இதற்கு பின்னரும், அணு ஆயுதங்களை உருவாக்க போவதில்லை என உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்தது.

ஆனால், படையெடுப்புக்கு முன்பு பேசிய புதின், சோவியத் கற்று தந்த நடைமுறை பயற்சியின் மூலம் உக்ரைன் அணு ஆயுதங்களை தயார் செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com