ரஷியாவில் சேவையை நிறுத்தியது ‘சோனி மியூசிக்’

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சோனி மியூசிக் ரஷியாவில் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷியாவில் சேவையை நிறுத்தியது ‘சோனி மியூசிக்’

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சோனி மியூசிக் ரஷியாவில் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து 16-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சோனி நிறுவனத்தின் ‘சோனி மியூசிக்’ ரஷியாவில் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சோனி மியூசிக் தரப்பில், ‘உக்ரைனில் அமைதி நிலவ, வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க சோனி மியூசிக் அழைப்பு விடுக்கிறது. நாங்கள் ரஷ்யாவில் எங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம்.  பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண முயற்சிகளில் எங்களின் ஆதரவு இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவில் அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவைதங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com