

மாஸ்கோ : மே 1ஆம் தேதிக்குள் ரஷிய நாட்டின் சந்தைக்குள் நுழையாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்க ரஷிய அரசு பரிசீலித்து வருகிறது.
பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத் தலைவர் ரெஷெட்னிகோவ் அனுப்பிய கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான போர் தொடங்கிய பிறகு, பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது பணியை நிறுத்திக் கொண்டதோடு, முதலீடு மற்றும் சேவைகளையும் துண்டித்துள்ளது.
இதனால், ரஷியாவில் உள்ள ஆயிரக்கணக்கானோர், தங்களது எதிர்காலம் குறித்து தெரியாமலும், வேலை நிலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
ரஷியாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் மே 1ஆம் தேதிக்குள் மீண்டும் பணிகளைத் தொடங்காவிட்டால், அந்த நிறுவனங்கள் ரஷியாவுக்குள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வணிக ரீதியான எந்த நடவடிக்கையையும் தொடங்காத வண்ணம் தடை விதிக்கும் முடிவு பரிசீலனையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.