சீனாவில் வேகமெடுக்கும் கரோனா: ஒரேநாளில் 2,010 பேருக்குத் தொற்று

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,010 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 
சீனாவில் வேகமெடுக்கும் கரோனா: ஒரேநாளில் 2,010 பேருக்குத் தொற்று

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,010 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் யூஹான் மாகாணத்தில் தொடங்கிய கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. இதன் பின்னா் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

கரோனா பரவல் கடந்த சில நாள்களாக மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. 

புதிய தொற்று பாதிக்கப்பட்டவர்களில், ஜிலின் மாகாணத்தில் 1,810, புஜியனில் 69, தியான்ஜினில் 29, ஷான்டாங்கில் 16, ஜியாங்சியில் 12, ஹெய்லாங்ஜியாங் மற்றும் ஹெனானில் தலா 10  என தொற்று பதிவாகியுள்ளது. 

மீதமுள்ள வழக்குகள் லியோனிங் மற்றும் ஹெபே உள்பட 12 மாகாண அளவிலான பிராந்தியங்களில் பதிவாகியுள்ளன.

ஜிலின் மாகாணத்தில் கரோனா வேகமாகப் பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அண்டை மாகாணங்களுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com