
கரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்களது விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து செயல்படுத்தி வந்தன. ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
இதையும் படிக்க | தாள் பற்றாக்குறை: அச்சிடுவதை நிறுத்திய இலங்கை பத்திரிகைகள்
இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்புகள் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீண்டும் இந்தியாவுடனான விமான சேவையைத் தொடங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவின் மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சின், கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு வாரந்தோறும் 170 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.