
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பத்திரிகைகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளன.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி சரிவால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக கடந்த சில தினங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் தொடங்கி இதர பொருள்கள் வரை இறக்குமதியை சார்ந்துள்ளதால் அந்நாடு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் அந்நாட்டில் பத்திரிகைகள் முடங்கியுள்ளன. இலங்கையின் முன்னணி பத்திரிகையான தி ஐலேண்ட் மற்றும் திவயினா ஆகியவை அச்சிடுதலில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் மற்றும் தாள்கள் பற்றாக்குறையால் பத்திரிகை அச்சிடுவதை சனிக்கிழமை மட்டும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.
இதற்காக தங்களது வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பத்திரிகை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் இணைய வழியல் தங்களது பத்திரிகை இயங்கும் எனவும் அவை தெரிவித்துள்ளன. 1981ஆம் ஆண்டு முதல் தி ஐலேண்ட் பத்திரிகையானது வெளியாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | எரியும் இலங்கை: என்ன நடக்கிறது? நேரடி ரிப்போர்ட் - 1
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.