ஊழியர்களுக்கு வரம்பில்லா விடுமுறை அளிக்கும் நிறுவனம்!: எது? ஏன்?

நியூசிலாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு வரம்பில்லா விடுமுறை அளிக்க முன்வந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

நியூசிலாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு வரம்பில்லா விடுமுறை அளிக்க முன்வந்துள்ளது. 

ஊழியர்களுக்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பு மற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆக்‌ஷன் ஸ்டெப் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெட் ஜோர்டன் என்பவர் இந்த நிறுவத்தைத் தொடங்கியுள்ளார். 

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தலைமையகத்தின் கிளைகளைத் தொடங்கியுள்ளது. 154 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் 105 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வரம்பில்லாத விடுமுறை அளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் துணைத் தலைவர், ஸ்டீவ் மாஹே, எங்கள் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளற்ற விடுமுறை அளிக்க முன்வந்துள்ளோம். அவர்களது உடல்நிலை, பேறுகாலம் என அனைத்து விடுமுறைகளும் இதில் அடங்கும். நாங்கள் ஒரு குழுவாக இயங்குகிறோம். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். வாழ்க்கையும், வேலையும் சரிவிகிதத்தில் வைத்துக்கொள்ளும்போது மிகச்சிறந்த பணி வெளிப்படும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com