
தப்பிக்கவே முடியாதா? அச்சம் தரும் காலநிலை மாற்ற ஆய்வு முடிவு
அடுத்த பேரிடர் காலநிலை மாற்றம் தான் என சமீபத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகம் முழுவதுக்குமான பூதாகரமான பிரச்னையாக மாறியுள்ளது. அதீத மழைப்பொழிவு, பருவநிலை பிறழ்வு, வெள்ள பாதிப்புகள், வெப்ப அலைகளின் தாக்கம் என நாளுக்குநாள் இயற்கை பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். சர்வதேச விஞ்ஞானிகள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நேச்சர் இதழில் வெளியாகின. அதன்படி காலநிலை மாற்றம் அடுத்த பேரிடராக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் வெப்பநிலை உயர்வானது மனித மற்றும் விலங்கினங்களின் மிகப்பெரிய இடம்பெயர்வுக்கு வழிவகுக்க உள்ளதாகவும் இது மனித சமூகத்தின் தவிர்க்கமுடியாத பேரிடராக இருக்கும் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | தமிழகத்தில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு: ஒரேநாளில் 64 பேருக்கு கரோனா
காலநிலை மாற்றம் எவ்வாறு பாலூட்டிகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என ஆராய்ந்த விஞ்ஞானிகள் வெப்பநிலை உயர்வால் புதிய வாழிடங்களை நோக்கி பாலூட்டிகள் இடம்பெயரும் நெருக்கடி ஏற்பட உள்ளதாகவும், இந்த இடம்பெயர்வு வைரஸ் பரிமாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
மேலும் எபோலா வைரஸ், கரோனா வைரஸ் போன்ற புதிய வைரஸ் உருவாக்கத்திற்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கப்போவதாகவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உலகின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ள விஞ்ஞானிகள் தவறும்பட்சத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படுத்தும் பேரிடர் தவிர்க்க முடியாது எனவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...