அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி தகவல்

கரோனா பேரிடர் காலத்தில் அமெரிக்காவில் முன்பைக் காட்டிலும் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி தகவல்

கரோனா பேரிடர் காலத்தில் அமெரிக்காவில் முன்பைக் காட்டிலும் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில் அமெரிக்காவில் நிலவிய மருத்துவமனைகளின் சுகாதார மற்றும் மேலாண்மை நிலை தொடர்பாக மருத்துவ சுகாதார மற்றும் தரப் பகுப்பாய்விற்கான ஹெச்ஹெச் ஏஜென்ஸி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அமெரிக்காவின் மொத்தம் 29 மாகாணங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின.


இதில் கரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த 2020 மார்ச் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவில் மொத்தம் 62,500 துப்பாக்கி பயன்பாடு தொடர்பான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் மரணம் ஏற்படுத்தாத காயங்களும், 4,400 மரணங்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட இது 15 சதவிகிதம் அதிகம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் கரோனா தொற்று பாதிப்பிற்கு மருத்துவமனையில் மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மறுபுறம் துப்பாக்கி வன்முறை தொடர்பாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வழக்கத்தைவிட கூடுதலாக அனுமதிக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதே காலப்பகுதியில் சாலை விபத்துகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்த நிலையில் துப்பாக்கி வன்முறையால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 34 சதவிகிதம் அதிகரித்ததாக அமெரிக்காவின் தேசிய மருத்துவ மற்றும் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com