உக்ரைனுக்கு மேலும் ரூ. 3 லட்சம் கோடி உதவி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

உக்ரைனுக்கு மேலும் 3 லட்சம் கோடி பொருளாதார உதவி அளிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைனுக்கு மேலும் 3 லட்சம் கோடி பொருளாதார உதவி அளிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவியை அமெரிக்கா தொடர்ந்து அளித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவினால் உக்ரைனும் ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 40 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 3 லட்சம் கோடி ரூபாய்) நிதியுதவி அளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைனுக்கு உணவுப் பொருள்களை அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 

அமெரிக்கா தரப்பில் இருந்து உக்ரைனுக்கு போர்க் கருவிகளும் அனுப்பப்படும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com