கோடீஸ்வர கருமியாக வாழும் பெண்: விவாகரத்து செய்த கணவர் சொன்ன பதில்

எய்மீ எலிசபெத் என்ற 50 வயது கோடீஸ்வர பெண், மிகக் கருமியாக வாழ்ந்து, அமெரிக்காவின் கோடீஸ்வர கருமிப் பெண் என்ற பட்டத்தைத்தட்டிச் சென்றுள்ளார்.
கோடீஸ்வர கருமியாக வாழும் பெண்: விவாகரத்து செய்த கணவர் சொன்ன பதில்
கோடீஸ்வர கருமியாக வாழும் பெண்: விவாகரத்து செய்த கணவர் சொன்ன பதில்


அமெரிக்காவில் பல கோடீஸ்வரர்கள் இருப்பார்கள். கோடீஸ்வர பெண்கள் இருப்பார்கள். ஆனால், எய்மீ எலிசபெத் என்ற 50 வயது கோடீஸ்வர பெண், மிகக் கருமியாக வாழ்ந்து, அமெரிக்காவின் கோடீஸ்வர கருமிப் பெண் என்ற பட்டத்தைத்தட்டிச் சென்றுள்ளார்.

பொதுவாக கருமியாக வாழ்ந்து கோடீஸ்வரர்களாக மாறுவார்கள். இவர் கோடீஸ்வரராக இருந்தும் கருமியாகவே வாழ்ந்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.32.46 கோடியாகும். ஆனால் இவர் தனது மாதச் செலவை இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 70 ஆயிரத்துக்குள்ளேயே அடக்கிவிடுகிறார் என்றால் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நம்பித்தான் ஆக வேண்டும்.

இவர் ஏற்கனவே கோடீஸ்வரராக இருக்கும் நிலையில், இந்த கருமித்தனத்தால் பல லட்சத்தை மாதந்தோறும் மிச்சம் பிடிப்பதாகவும் இதனால் மேலும் இவரது சொத்து அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

லாஸ் வேகாஸில் மிகப்பெரிய தொழிலதிபராகத் திகழும் எலிசபெத்தின் மறுபக்கம் பலராலும் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது. இவர் எந்த நிறுவனத்துக்குத் தேவைப்படும் விஷயங்களை வாங்காமல், வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துகிறார். அதனால் கிடைக்கும் லாபத்தை பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்.

இவரது முன்னாள் கணவர் மைக்கேல் முர்ரே, தனது மனைவியின் கருமித் தனம் பற்றி நன்கு அறிந்துள்ளார். அது மட்டுமல்ல, விவாகரத்துக்குப் பின்னரும் கூட, தனது வீட்டிலேயே எலிசபெத் வசிக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டாராம் முர்ரே. காரணம் என்ன தெரியுமா? தான் இந்த வீட்டிலேயே அவர் இருக்க வேண்டும் என்று கூறாவிட்டால், ஒருவருக்குத்தானே என்று கூறி மிகவும் சிறிய வீடு ஏதேனும் ஒன்றில் போய் வசிப்பார் என்ற அச்சம் காரணமாகவே அப்படி சொன்னதாகவும் குறிப்பிடுகிறார்.

பொதுவாகவே தனக்கு செலவிடுவது பிடிக்கவே பிடிக்காது என்கிறார் கோடீஸ்வர கருமியான எலிசபெத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com