வருவாய் குறைவு: 150 பேரை பணியிலிருந்து நீக்கியது நெட்ஃப்ளிக்ஸ்

வருவாய் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கைக் குறைந்ததால் 150 பேரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்.
வருவாய் குறைவு: 150 பேரை பணியிலிருந்து நீக்கியது நெட்ஃப்ளிக்ஸ்

வருவாய் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கைக் குறைந்ததால் 150 பேரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்.

திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றை வாங்கியும் தயாரித்தும் நேரடியாக தன்னுடைய தளத்திலேயே வெளியிடும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் தனக்கென கோடிக்கணக்கான பார்வையாளர்களையும் சந்தாதாரர்களையும்  கொண்டுள்ளது.

சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸில்  மூன்றாம் பாலினத்தனவரை கேலி செய்யும் வகையில் உருவானதாக  ‘டேவ் செப்பல்’ நகைச்சுவை தொடரை ஒளிபரப்பக் கூடாது என மேற்கத்திய நாடுகளில் சிலர் போராட்டம் நடத்தினர்.

பின், நெட்ஃபிளிக்ஸில் பணியாற்றும் சிலரும் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ‘நிறுவனம் சொல்லும் வேலையை மட்டும் செய்யுங்கள். மாற்றுக்கருத்து இருப்பவர்கள் பணியாற்ற வேண்டாம்’ என நெட்ஃபிளிக்ஸ் கடுமையாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அதிகப்படியான ஓடிடிகளின் வருகையால் கடந்த காலாண்டில் வருவாய் மற்றும் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்ததால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தன் ஊழியர்களில் 150 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறது. மேலும், அடுத்த காலாண்டிற்குள் 20 லட்சம் சந்தாதாரர்களை இழக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் அனிமேஷன் துறையில் இருந்தவர்கள் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com