உக்ரைனுக்கு உதவ 2 போர் விமானங்களை வாங்கிய பாகிஸ்தான் செல்வந்தர்

பாகிஸ்தானைச் சேர்ந்த பெரும் செல்வந்தவர் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு உதவுவதற்காக 2 போர் விமானங்களை வாங்கி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது சகூர்-கமாலியா சகூர்
முகமது சகூர்-கமாலியா சகூர்

பாகிஸ்தானைச் சேர்ந்த பெரும் செல்வந்தவர் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு உதவுவதற்காக 2 போர் விமானங்களை வாங்க உதவியதாக  தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 3 மாதங்களை எட்டவுள்ள நிலையிலும் ரஷியாவுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. 

போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியையும் அளித்து வருகின்றன. 

மேலும், ரஷியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் 969 பேர் சரணடைந்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆயுத பற்றாக்குறையில் உள்ள உக்ரைனுக்கு  பாகிஸ்தானின் பெரும் செல்வந்தரும் முன்னாள் ‘கீவ் போஸ்ட்’ செய்தி நிறுவனத்தின் வெளியீட்டாளருமான முகமது சகூர் அவரின் நண்பர்களுடன் இணைந்து இரண்டு போர் விமானங்களை வாங்க பொருளாதார ரீதியாக உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவருடைய மனைவியும் உக்ரைனைச் சேர்ந்த பாடகியுமான கமாலியா சகூர் உறுதி செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com