உலகளவில் கரோனா பாதிப்பில் இருந்து 49,57 கோடி போ் குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52.59 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 62,97,118 ஆகவும்,
eucovid072415
eucovid072415

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52.59 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 62,97,118 ஆகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 11,429,898,867 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52,59,04,563 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 62,97,118 போ் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 49,57,14,385 போ் பூரண குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 060 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 38,411 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,47,99,040    -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,28,337-ஆகவும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 8,14,91,282-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,31,31,822-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,24,323 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,07,52,226-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,65,491 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இதனிடையே,  சா்வதேச அளவில் கரோனாவுக்கு பலியானவா்களின் வாராந்திர எண்ணிக்கை மாா்ச் மாத இறுதியிலிருந்து தொடா்ச்சியாக குறைந்து வந்த வாராந்திர கரோனா பாதிப்பு, கடந்த வாரத்தில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்க பிராந்தியங்களின் கரோனா பரவலால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், அந்த நோய்க்கு பலியானவா்களின் வாராந்திர எண்ணிக்கை கடந்த வாரம் 21 சதவீதம் சரிந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com